வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்!!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்!!

சென்னை பர்மா பஜாரில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை பாரி முனையில் உள்ள பர்மா பஜாரில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் சென்னை மாநகராட்சி சார்பாக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த கடைகளின் வியாபாரிகள், மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். 

ஆனால், இதில் 375 கடைகளை சார்ந்த வியாபாரிகள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதனை உற்று நோக்கும் போது, வாடகை பாக்கி  ரூபாய் 75 லட்சம் உள்ளது தெரிய வந்துள்ளது. அதனால், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்குமாறு, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்ற அதிகாரிகள்,முதல் கட்டமாக, ரூபாய்  25 லட்சம் வாடகை பாக்கி உள்ள 45 கடைகளுக்கு இன்று சீல் வைத்துள்ளனர். மீதமுள்ள 330 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பர்மா பஜாரில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் ரூபாய் 1100 வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறைந்த பணத்தைக் செலுத்தாமல் வியாபாரிகள் செயல்படுகிறார்கள் என்பது வேதனையின் உச்சமாக கருதப்படுகிறது.

ஆயிரத்து 100 ரூபாய் என்ற குறைந்தபட்ச வாடகையைக் கூட செலுத்த மறுப்பது வியாபாரிகளின் பொறுப்பின்மையை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க || சந்திரயான் குறித்த சர்ச்சை பதிவால், கண்டன மழையில் நினையும் பிரகாஷ் ராஜ்... மாட்டிகிட்டாரா?