3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாய்... விருது வழங்கி கவுரவித்த ராணுவம்...

தனது மூன்று மகன்களையும் ராணுவத்தில் பணிபுரிய அனுப்பிய அம்பை மூதாட்டிக்கு வீரத்தாய் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாய்... விருது வழங்கி கவுரவித்த ராணுவம்...

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்- சுப்புலெட்சுமி தம்பதியர்.  இவர்களுக்கு ராம.அரிராம், ராம. ரத்தினப்பா, ராம.சண்முகவேலாயுதம் ஆகிய 3 மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களின்  மூன்று மகன்களும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மூத்த மகன்,  அரிராம் ராணுவத்தில் பணிபுரிந்த ஓய்வு பெற்றுள்ள நிலையில்,   ரத்தினப்பா போபாலிலும், சண்முக வேலாயுதம் டில்லியிலும் ராணுவ மருத்துவப் பிரிவில் சுபேதாராகப் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது மூன்று மகன்களையும் ராணுவப் பணிக்கு அனுப்பிய தாய், சுப்புலட்சுமி அம்மாளைப் பாராட்டி ராணுவம் சார்பில் அவருக்கு வீரத்தாய் விருதும் வெள்ளிப்பதக்கமும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட படை வீரர்கள் நல அலுவலக உதவி இயக்குநர் முருகன், மூதாட்டி சுப்புலட்சுமிக்கு, வீரத்தாய்ம விருதும், வெள்ளி பதக்கமும் வழங்கி கவுரவித்தார். அத்துடன் ராணுவம் சார்பில் மூதாட்டிக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இது தனது மகன்கள், நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக தனக்கு கிடைத்த மரியாதை என மூதாட்டி பெருமிதத்துடன் கூறினார்.