தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை....அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!!

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை....அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!!

இதுவரை தமிழகத்தில் 19 பேருக்கு தொற்று உறுதியானதில், யாருக்கும் ஒமைக்ரான் பரவல் கண்டறியப்படவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் 14வது மெகா தடுப்பூசி முகாம் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ,

தமிழகத்தில் இன்று 14வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் 45ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில், முதல் தவணை 6லட்சத்து81ஆயிரத்து 346பேரும், 2வது தவணை 13லட்சத்து 64ஆயிரத்து 001 பேரும் செலுத்தியுள்ளனர் என்றார்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7கோடியே 74 லட்டத்து 53ஆயிரத்து 917 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். முதல் தவணை 83. 48%, 2வது தவணை 51.31% பேரும் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர் என கூறினார். 

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் ஹைரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இதுவரை ஹைரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 10ஆயிரத்து 5 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இன்று 2207 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் சிங்கப்பூரில் இருந்து வந்த 2-பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்றும் இதுவரை மொத்தம் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதில், அனைவருக்கும் டெல்டா வைரஸ் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என கூறினார்.