நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்..!

ஜி.எஸ்.டி நிதியை மத்திய அரசு சரியாக வழங்குவதில்லை..!

நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்..!

தமிழக அரசின் நிதி நிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-ம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 
கடந்த ஆட்சியின் போது போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கைவிடப்படும் என குறிப்பிட்டார். அரசு ஊழியர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் , ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு தான் வகுத்ததாக பெருமிதம் கொண்டார். அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான் என்று பெருமைபட கூறியவர், ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரண நிதி வரை மத்திய அரசு சரியாக வழங்குவதில்லை என்றும் கொத்தடிமைகளை போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் மாநில அரசு உள்ளதாக விளக்கமளித்தார். மேலும், தமிழக அரசின் நிதி நிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அப்போது அவர் உறுதி அளித்தார்.