திமுக வின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும்..........விஜய பிரபாகரன்

திமுக வின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

திமுக வின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும்..........விஜய பிரபாகரன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, வெற்றி தோல்வி என்பது வந்து போகும் என்றும் மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம் என கூறினார்.

திமுக கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என கூறிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சி செய்கிறார் என்றார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை நலமாக உள்ளது ,அவர் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் கொஞ்ச நாள் ஆகும், எங்களால் ஆன முயற்சி செய்து கொண்டிருக்கொறோம் என்றும் மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் சந்திப்பார் என தெரிவித்தார்.