சேலம்: அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள்...நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

சேலம்: அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள்...நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

சேலத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட்டார கல்வி அதிகாரி உத்தரவு:

சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இல்லாமலும் சில பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அப்படி எந்தவித ஒப்புதலும் இன்றி செயல்பட்டு வரும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியை மூட வட்டார கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

பள்ளி சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:

வட்டார கல்வி அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பள்ளி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கு அங்கீகாரம் பெற முயற்சித்து வருவதாக பள்ளி சார்பில் வாதிடப்பட்டது.

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/tamilnadu/Kallakurichi-case-Arrested-innocents-want-compensation-Who-is-that-innocent

நீதிபதி உத்தரவு:

பள்ளியின் வாதத்திற்கு  பதிலளிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி அப்துல் குத்தூஸ், சேலத்தில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.