நீர்வளத்துறை ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்.. பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் பரபரப்பு!!

நீர்வளத்துறை ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்.. பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் பரபரப்பு!!

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 114 ஹெக்டர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்கள் அவர்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் போராட்டம்:

இந்நிலையில், போஸ்கோ நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சிவராஜ் பேட்டை ஏரிக்கரை, திருப்பத்தூர் - வேலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேநேரத்தில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.