கருமுட்டை விவகாரம் -சுதா மருத்துவமனை - 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

கருமுட்டை விவகாரம் -சுதா மருத்துவமனை - 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

கருமுட்டை விவகாரத்தில் சிக்கிய ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் 20க்கும் மேற்பட்ட  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.ஈரோடு பெருந்துறை சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் எழுந்த புகாரின்பேரில், மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்ற உத்தரவின்பேரில் சீல் அகற்றப்பட்டு, மீண்டும் செயல்பட துவங்கியது. 

கருமுட்டை எப்போது உற்பத்தியாகும்” பெண்கள் அறிந்து கொள்ளுங்கள்…!! – Seithi  Solai

மேலும் படிக்க | கவிஞர் விடுதலை சிகப்பி மீது பொய்வழக்கு: கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் - தமுஎகச மாநிலக்குழு

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் இன்று மாலை வருமான வரித்துறையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது நோயாளிகளுக்கோ, அவர்களது உடன் வந்தவர்களுக்கோ வருமான வரித்துறையினர் எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. 

Erode Girl Embryo Donation Issue Sudha Scan Centre Sealed | Embryo  Donation:சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஈரோடு சுதா மருத்துவமனை  ஸ்கேன் சென்டருக்கு சீல்வைப்பு

மருத்துவமனையின் சேர்மேன், நிர்வாக இயக்குநர் அறைகள், அக்கவுண்ட்ஸ் பிரிவில் இருந்த வரவு செலவு கணக்கு போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சோதனை நடத்தினர். இந்த மருத்துவமனை நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின்பேரில் சோதனை நடந்து வருகிறது என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | அமைச்சர் கே.என். நேருவின் பேச்சால் கட்சி வட்டாரத்தில் சலசலப்பு!!!! காரணம் என்ன?