டெங்கு எதிரொலி: சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ 1 லட்சம் வரை அபராதம்!!

டெங்கு எதிரொலி: சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ 1 லட்சம் வரை அபராதம்!!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலியாக சுகாதாரமற்ற குடியிருப்பு மற்றும் கட்டிடங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை தடுக்கும் பணிகளில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பயன்பாடற்ற நீர் நிலைகளில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

மேலும், குடியிருப்புகள், பள்ளி கல்லூரி வளாகங்கள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.  

இதனை மீறும் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு 100 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க || பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளைமுதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!!