மக்களே உஷார்....! மாண்டஸ் புயல் தீவிரமடைய வாய்ப்பு...! எப்போது கரையை கடக்கும்...?

மக்களே உஷார்....! மாண்டஸ் புயல் தீவிரமடைய வாய்ப்பு...! எப்போது கரையை கடக்கும்...?

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலைக்குள் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக தீவிரமடைய உள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

காரைக்காலில் இருந்து 420 கிமீ கிழக்கு-தென்கிழக்கு திசையிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. மேலும் தீவிர புயலாக நிலைக்கொண்டு, டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை வரை நீடிக்கும் பின்னர் படிப்படியாக வலுவிழந்து நாளை புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மகாபலிபுரத்தைச் சுற்றிலும், டிசம்பர் 9- ஆம் தேதி நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : விமான சேவைகள் ரத்து...! மாண்டஸ் புயல் எதிரொலி..!