மக்கள் நினைத்தால் தூக்கி வீசலாம்....சீமான் பேட்டி!!!

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முறையாக கணக்கீடு செய்து உரிய தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை  விடுத்திருக்கிறார்.

மக்கள் நினைத்தால் தூக்கி வீசலாம்....சீமான் பேட்டி!!!

மழையால் பாதிக்கபட்ட டெல்டா விவசாயிகளுக்கு  தமிழக அரசு அறிவித்துள்ள 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் போதாது என்று சீமான் கூறியுள்ளார். 

மாயை தோற்றம்:

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் எனவும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது மாயை தோற்றம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். 

மக்களே..:

மக்கள் மாற்றத்தை விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தூக்கி வீசலாம் எனவும் நாங்கள் காசு கொடுக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.  ஆனால் அதிகாரிகள் துணையோடு காசு கொடுத்து வருகிறார்கள் எனவும் கடைசி மூன்று நாட்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் எனவும் கமலஹாசன் காங்கிரசுடன் சேர்ந்துள்ளது அவரது தனிப்பட்ட விருப்பமாகும் எனவும் கூறியுள்ளார்.

போராடுவேன்..:

பேனா சிலை வைக்க நடவடிக்கை எடுத்தால் போராட்டத்தை துவங்குவேன் என்றும் சீமான் எச்சரித்திருக்கிறார்.  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி தண்ணீர் தொட்டி வைப்பது அவமானம்  என கூறிய சீமான், குடிநீரில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:   சிறுபான்மையினர் உரிமையை காக்க வேண்டும்... முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய வைகோ!!