வெள்ளப் பெருக்கை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் மக்கள்...

சங்கராபுரம் அருகே மணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய பொருட்களை  பொதுமக்கள் கொண்டு செல்கின்றனர். 

வெள்ளப் பெருக்கை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் மக்கள்...

சங்கராபுரம் மோட்டாம்பட்டி அடுத்த கூடலூர் என்ற மலை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் அரிசி,மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட கடைகள் கிடையாது, இதுவரை கிராமத்திற்கு பேருந்து வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாமல் கூடலூர் பகுதியில் இருந்து சுமார் 150-க்கும்  மேற்பட்டோர் அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்டவற்ற கொண்டு சொல்வதற்கு  ஆபத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். எனவே உயிர் இழப்புகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.