பைக் டாக்சி ஓட்டுநர்கள் கமிஷனர் அலுவலகத்தில் மனு!

ரேப்பிடோ பைக் டாக்சி ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தம் வகையில் ஆட்டோ ஓட்டுநர்களும் டாக்ஸி ஓட்டுனர்களும் செயல்படுவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதி முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரேப்பிடோ பைக் டாக்ஸி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே பைக் டாக்ஸி வந்ததிலிருந்து ஆட்டோ ஓட்டுநர்களும், கால் டாக்ஸி ஓட்டுநர்களும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. 

ரேப்பிடோ போன்ற பைக் டாக்ஸி வந்ததன் மூலமாக ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி வருமானம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வந்தன.  

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேப்பிடோ பைக் டாக்ஸியை ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்கள் போன்று புக் செய்து அவர்களை மிரட்டியும், தாக்கியும் வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டுமெனவும் தமிழ்நாடு பைக் டாக்சி அசோசியேசன் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சுற்றி வந்த அமைச்சர்; விரட்டி பிடித்த விவசாயிகள்!