பெட்ரோல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கும் கீழ் விற்பனை: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

தமிழக சட்டசபையில் அறிவித்த பெட்ரோல் மீதான வரி  குறைப்பு இன்று முதல் அமலானதையடுத்து,  ஒரு லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுகளுக்கு விற்கப்படும் நிலையில் இன்று முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, பெட்ரோல் விலையில், ஒரு லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.