பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது! டிஜிபி அதிரடி!!

மாநில மனித உரிமை ஆணையம் வழக்கின் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது! டிஜிபி அதிரடி!!

மாநில மனித உரிமை ஆணையம் வழக்கின் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

காவலர்கள் கைதிகளை அழைத்துச் செல்லும்போது, சில நேரங்களில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போதும், காவலர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் சம்பவங்கள் நடைபெற்றன. சில காவலர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்று நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதன் ஒரு தொடர்ச்சியாக கடந்த 2019 செப்டம்பர் மாதம் திருச்சியில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த காவலருக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு அரசு பேருந்து நடத்துனர் கோபிநாத் என்பவர் நெஞ்சுவலி காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு விசாரணை செய்தது. அந்த வழக்கில் தமிழக டிஜிபி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் தமிழக டிஜிபி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக காவலர்கள் கைது வாரண்ட் கையில் வைத்திருந்தால் இலவசமாக பயணிக்கலாம். மற்ற நேரத்தில் இலவசமாக பயணிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

இதுபோன்று காவலர் மற்றும் நடத்துனர் இடையே மோதல் சம்பவம் நிகழக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக மாநில மனித உரிமை ஆணைய வழக்கை மேற்கோள் காட்டி இந்த உத்தரவை அனைத்து காவல் அதிகாரிகளுக்கும்  உத்தரவை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளார்.