போடி மெட்டு சோதனை சாவடி வழியாக வரும் கேரள மக்கள்... அலட்சியத்துடன் இருக்கும் சுகாதாரத்துறை? கொரோனா பரவும் அபாயம்!

போடி மெட்டு சோதனை சாவடி வழியாக வரும் கேரள மக்கள்... அலட்சியத்துடன் இருக்கும் சுகாதாரத்துறை? கொரோனா பரவும் அபாயம்!

கேரளாவில் கொரானா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று கேரளாவில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் தமிழக-கேரள எல்லையான போடிமெட்டு முந்தல் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இல்லாமல் வாகனங்கள் கடந்து செல்கின்றனர்.

தேனி மாவட்டம் தமிழக எல்லை களான போடிமெட்டு கம்பம்மெட்டு குமுளி மலைச்சாலைகளில் வழியாக கேரளாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றனர். தற்போது கேரளாவில் நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரம் என்ற அளவிற்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையானால் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும் அத்தியாவசிய தேவையான வாகனங்கள் தமிழக-கேரள சாலைகள் வழியாக பயணித்து வருகின்றனர்.

ஆனால் போடி மெட்டு முந்தல் சோதனை சாவடிகளில் தமிழக சுகாதாரத்துறையினரால் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஒரு காவலர் வைத்து மட்டுமே போடி மெட்டு முந்தல் மதுவிலக்கு சோதனைச் சாவடியில்  வாகனங்களை பரிசோதனை செய்து வருகின்றனர். இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் வாகன பயணிகளால் தமிழகத்திற்கு எளிதில் நோய்த் தொற்று பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.