குறைய ஆரம்பித்தத காய்கறிகளின் விலை... நிம்மதி பெருமூச்சு விடும் இல்லத்தரசிகள்...

சென்னையில் காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

குறைய ஆரம்பித்தத காய்கறிகளின் விலை... நிம்மதி பெருமூச்சு விடும் இல்லத்தரசிகள்...

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை அதிரடியாக ஏற்றம் கண்டது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டதால் சாமானிய மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த விலை உயர்வு தொடர் மழை மற்றும் பயிர்கள் நாசமானதே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் குறைந்து, அதிகபட்சமாக 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் முருங்கைக்காயும் 20 ரூபாய் குறைந்து, கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ், வெண்டைக்காய், கத்தரிக்காய், பட்டாணி போன்றவற்றின் விலையும் சற்று குறைந்துள்ளது. தற்போது மழை குறைந்ததால், விலை கட்டுக்குள்  வந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.