விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பு வரவேற்கத்தக்கது - இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பு மிகவும் வரவேற்கத்தக்கது என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விண்வெளித்துறையில் தனியார் இணைவது நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், விண்வெளித்துறை கட்டமைப்பில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்க வழிவகை செய்யும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்றும் கூறினார்.