இன்று ஆடிப்பெருக்கு- ஆற்றங்கரைகளில் கூட பொதுமக்களுக்கு தடை!

தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான ஆடிப்பெருக்கு மாநிலம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. 

இன்று ஆடிப்பெருக்கு- ஆற்றங்கரைகளில் கூட பொதுமக்களுக்கு தடை!

தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான ஆடிப்பெருக்கு மாநிலம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. 

தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றும் பண்டிகைகளில் ஒன்றாக ஆடிப் பெருக்கு திகழ்கிறது. குறிப்பாக காவிரி நதியின் இரு கரைகளிலும் அமைந்துள்ள மாவட்டங்களில், இந்தப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், புனித நீராடி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர். 

புதுமணத் தம்பதியர் காவிரியில் புனித நீராடவும், தாலி மாற்றும் சடங்கை மேற்கொள்வதற்காகவும் ஆயிரக்கணக்கில் நதிக்கரையில் சங்கமிப்பர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டும் பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரையில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்புக்கட்டைகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் வீடுகளிலேயே ஆடிப் பெருக்கை கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.