கோவையில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

கோவையில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, கல்குவாரி அமைத்தால் கடும் போராட்டம் வெடிக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொதுமக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில்  எத்தப்பன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள்  உள்ளது.

இப்பகுதியில் உள்ள கரியமலை பகுதியில் புதியதாக தனியார் கல்குவாரி அமைக்க கனிம வளத்துறை சார்பில் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கரியமலை பகுதியில்  கல்குவாரி அமைக்க அதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நபர்கள் தற்போது தொடங்கி உள்ளனர். இந்த புதிய கல்குவாரி அமைக்கப்பட்டால், அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள எத்தப்பன் நகர், கோடதாசனூர், அம்பேத்கார் நகர், ராம் நகர், டி.ஆர்.எஸ் நகர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அங்குள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும்.  

புதியதாக கல்குவாரி தொடங்கினால், அங்கு வெடிக்கப்படும் வெடிகளால், குடிருப்பு சேதம் ஏற்படுவதுடன் இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழையும் அபாயமும் உள்ளது. மேலும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். இதனால், அப்பகுதி  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், இது குறித்து எத்தப்பன் நகர் பகுதியில் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் நல பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு பிரச்சனை குறித்து விவாதித்து, கல்குவாரி மற்றும் கிராவல் குவாரி அமைக்க வழங்கபட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த கல்குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏதேனும் நடைபெற்றால், போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், ஊர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க || ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்த மதுரை பெண்!