தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விதிமுறைகள் வெளியீடு  

பள்ளி, கல்லூரி தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், இதர தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக விதிமுறைகளுடன் கூடிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக தேர்வு எழுதும் நபர், வாசிக்கும் நபர், ஆய்வக உதவியாளர் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்வை எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒருநாள் முன்பே அதை சரிபார்த்துக்கொள்ள அனுமதிப்பது, குறைந்தபட்ச கல்வித்தகுதி உள்ளவரை உதவியாளராக நியமிப்பது, வெவ்வேறு மொழிகளில் தேர்வு எழுதினால் ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளரை நியமிப்பது, தேர்வின்போது கூடுதல் அவகாசம் வழங்குவது, தேர்வறைகள், தேர்வு மையங்களில் சாய்தளம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கட்டாயமாக இடம்பெற வேண்டும் என தேர்வு நடத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.