இஸ்லாமிய பயணிகளை சுட்ட ஆர்.பி.எப். மனநலம் பாதிக்கப்பட்டவரா?

இஸ்லாமிய பயணிகளை சுட்ட ஆர்.பி.எப். மனநலம் பாதிக்கப்பட்டவரா?

ஓடும் ரயிலில் இஸ்லாமியப் பயணிகளை தேடித்தேடிச் சுட்ட ஆர்.பி.எப். வீரர் மனநலம் பாதிக்கப்பட்டவரா?என போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த ஜூலை30ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயிலில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் 3 இஸ்லாமியர்கள் என 4 பேரை சேத்தன்சிங் என்பவர் சுட்டுக்கொன்றார். பல்வேறு பெட்டிகளில் பயணித்த இஸ்லாமியர்களை தேடித்தேடிச் சுட்ட அவர், இந்தியாவில் இருக்க வேண்டுமெனில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் மிரட்டினார்.  இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தியாவில் அதிகம் பேசப்படாத இச்சம்பவம் சர்தேச அளவில் பெரும் விவாதமாகியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகும், பாஜகவின் மதவெறி பிரச்சாரங்களே இச்சம்பவத்திற்கு காரணம் என்றும் பல்வேறு சர்வதேச பத்திரிகைகள் குற்றம்சாட்டி வருகின்றன.   

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சேத்தன் சிங்கிடம் வெறுப்புணர்வு விசாரணையை விடுத்து, மனநல ஆய்வறிக்கையை போலீசார் தயார் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆய்வறிக்கை நிரூபிக்கப்பட்டால் அவர் விடுவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க:வெறிநாய் கடித்து 50 க்கும் மேற்பட்டோர் காயம்!