மழைநீர் வடிகால் தூய்மை செய்யும் முகாம்... 65 கிலோமீட்டருக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்...

கிருஷ்ணகிரி நகராட்சியில் 65 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் தூய்மை செய்யும் முகாம் துவக்கம் - ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

மழைநீர் வடிகால் தூய்மை செய்யும் முகாம்... 65 கிலோமீட்டருக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்...

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார் பில் இன்று முதல் 25ஆம் தேதி வரையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் துவங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் 65 கிலோமீட்டர் நிலத்திற்கு மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் இன்று காலை துவங்கியது கிருஷ்ணகிரி ரவுண்டானா ஐந்து ரோடு சந்திப்பு பகுதியில் இந்த பணிகள் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாமில் எதிர் வரும் பருவமழை கருத்தில் கொண்டும் மழைநீர் எளிதாக வடிகால் சாக்கடை கால்வாய்களில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு அதற்காக சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய்களை தூய்மை படுத்துவதும் பணியும் வணிக நிறுவனங்கள் சிறு குறு கடைகள் சாக்கடை கால்வாய்கள் மேல் நடைப்பாதை அமைக்கப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜே.சி. பி.வாகனங்கள் மூலமாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக தூய்மை படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 25ம்தேதிக்குள் முழுமையாக சாக்கடை கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.