தலைமறைவான ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்...

தலைமறைவான இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தலைமறைவான  ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில்  முன் ஜாமின் மனு தாக்கல்...

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே. முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.  ஆனால், அவர்களின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், முன்ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.