” படிப்பது ராமாயணம்..இடிப்பது?” நயினாருக்கு பதிலடி தந்த தங்கம் தென்னரசு!!!

” படிப்பது ராமாயணம்..இடிப்பது?” நயினாருக்கு பதிலடி தந்த தங்கம் தென்னரசு!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்தக் கூட்டத்தொடர் வருகிற 19ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தார் சபாநாயகர் அப்பாவு.

இதனைத் தொடர்ந்து பல திட்டங்கள் குறித்தும் தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.  இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தில் பாஜகவினர் சபை வெளிநடப்பு செய்தனர்.

மேலும் தெரிந்துகொள்க:     ”தமிழ்ப்பெருமை பேசும் மோடி இந்தியை திணிக்கிறாரா?” நயினார் நாகேந்திரன் விளக்கம்!!!

பாஜக வெளிநடப்பு:

ஹிந்தி மொழி தொடர்பான மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க முடியாது எனக் கூறி அவையை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார் நாகேந்திரன்.  

சபாநாயகர்:

நயினார் நாகேந்திரன் வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சபாநாயகர் அவரிடம் தொழில்துறை அமைச்சர் பேசுவதைக் கேட்டு விட்டு வெளியேறுமாறு கூறினார்.

தங்கம் தென்னரசு எதிர்க்கேள்வி:

சபாநாயகரைத் தொடர்ந்து பேசிய தொழில் துறை அமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கேந்திரியா வித்யாலயா பள்ளிகளிலும் இன்றே தமிழை பயிற்று மொழியாக பாஜக அறிவிக்குமா? எனக் கேள்வி எழுப்பினார்.  இந்த கேள்வி இங்கே எழும் என்பதாலேயே அவர்கள் வெளிநடப்பு செய்ய முயன்றனர் எனவும் கூறினார்.

மேலும், இங்கே தாய்மொழியை கொண்டு வருவதை விடுத்து விட்டு தமிழுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விட்டு ஐநாவில் திருக்குறளையும் தமிழையும் பேசுவேன் என்பது ராமாயணத்தைப் படித்து விட்டு பெருமாள் கோயிலை இடிப்பது போன்றதாகும் எனக் கூறினார்.

                                                                                                                                      -நப்பசலையார்

இதையும் படிக்க:    ஸ்மார்த்த பிராமணர்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!!