வெளியானது வலிமை படத்தின் அப்டேட்! அஜித் ரசிகர்கள் உற்சாகம்!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ளது.

வெளியானது வலிமை படத்தின் அப்டேட்! அஜித் ரசிகர்கள் உற்சாகம்!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வையை அடுத்து அஜித் - வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.  இப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

வலிமை படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே எந்தவித அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இதனை அஜித் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். எனினும் இந்த முதல் பார்வை முழுக்க முழுக்க போனி கபூரின் மேற்பார்வையில் உருவாகியுள்ளது. அதிலும் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் மோஷன் போஸ்டரையும், படத்திற்கான முதல் பார்வை போஸ்டரையும் உருவாக்கியுள்ளனர். இதனால்  இந்த போஸ்டர்கள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு அப்பாற்பட்டு, ஹிந்தி திரைப்பட பாணியில் காட்சி அளிக்கின்றன என்றும் கூறப்படுகிறது.