ஹெல்மெட் அணிய விலக்கு... மாமன்ற கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய கவுன்சிலரின் கோரிக்கை!!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.  

சென்னை மாநகராட்சியில் மாமன்ற கூட்டத்தில் 39 ஆவது வார்டு உறுப்பினர் தேவி பேசுகையில் மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வுக்கு செல்லும் போது ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்

மேலும் ஆய்வு செய்யும் போது ஹெல்மெட் அணிந்திருந்தால் தன்னை பொதுமக்கள் அடையாளம் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது என்றும் காரணமாக தெரிவித்தார்

இதற்கு பதில் அளித்து பேசிய சென்னை மாநகராட்சி மேயர் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது தமிழக அரசின் விதி, இதில் யாருக்கும் விதிவிலக்கு வழங்க முடியாது என தெரிவித்தார்

இதற்கு இடையில் பேசிய மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன்  வேண்டுமென்றால் மாமன்ற உறுப்பினர் என ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது