வழக்குகளை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி சிவி சண்முகம் புகார்!

வழக்குகளை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி சிவி சண்முகம் புகார்!

அதிமுக அலுவலக கலவரத்தின் போது, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை திருடப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி  சிவி சண்முகம் சார்பில், 
டிஜிபி அலுவலகம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கலவரம்:

கடந்த ஜுலை 11ஆம் தேதி சென்னை வனகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். ஈ.பி.எஸ் இடைக்கால பொதுசெயலாளர் ஆனதை தொடர்ந்து அன்றைய தினமே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் தொடர்பாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் 3 வழக்குகளை பதிவு செய்த காவல்துறையினர், 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவி சண்முகம் புகார்:

இந்த கலவரத்தின்‌போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பத்திரங்கள், பரிசு பொருட்கள், பல முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கடந்த ஜூலை 23ஆம் தேதி, சிவி சண்முகம் புகார் அளித்தார்.சிபிஐ

விசாரிக்க கோரி  சிவி சண்முகம் சார்பில் மனு:

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாக சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் ஆவணங்களை கொள்ளையடித்த வழக்கு, கலவர வழக்கு என 2 வழக்குகளையும் சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி சிவி சண்முகம் சார்பில், தமிழக உள்துறை செயலாளர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு
தபால் மூலமாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.