நெல்லையில் இருந்து ஒரே நாளில் ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி நன்கொடை!!

திருப்பதி திருமலை  ஏழுமலையான் கோவிலுக்கு  இன்று ஒரே நாளில் திருநெல்வேலியிலிருந்து 10 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து ஒரே நாளில் ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி நன்கொடை!!

நெல்லையைச் சேர்ந்த கோபால் பாலகிருஷ்ணன் என்பவர் இன்று திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியை நேரில் சந்தித்து தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை, வெங்கடேஸ்வரா கோ சம்ரக்ஷன அறக்கட்டளை, பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் ரிசர்ச் அண்டு ரிகாபிலிடேசன் மருத்துவமனை, வெங்கடேஸ்வரா வேத பரிரட்சன அறக்கட்டளை, வெங்கடேஸ்வரா அன்ன பிரசாத அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ ஸ்ரேயாஸ் அறக்கட்டளை மற்றும் தேவஸ்தானத்தின் பக்தி சேனல் ஆகியவற்றுக்கு தலா ஒரு கோடி ரூபாய் என ஏழு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த ஸ்டார் டெஸ்டிங் அண்ட் இன்ஸ்பெக்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெங்கடேஸ்வரா வித்யாதான அறக்கட்டளைக்கு ஒரு கோடியும், பாலகிருஷ்ணா  எரிபொருள் நிலையம் சார்பில் வெங்கடேஸ்வர ஆலய நிர்மாண அறக்கட்டளைக்கு ஒரு கோடியும், சீ ஹப் இன்ஸ்பெக்சன் சர்வீசஸ் நிறுவனம் வெங்கடேஸ்வரா பாரம்பரிய பாதுகாப்பு அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாயையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனால் இன்று ஒரே நாளில் திருநெல்வேலியிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு 10 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது.