தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உதவியால்...விமானத்தில் பயணித்த கிராமப்புற மாணவர்கள்!

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உதவியால்...விமானத்தில் பயணித்த கிராமப்புற மாணவர்கள்!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப் புற மாணவர்கள் இருபது பேர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பல்வேறு தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் காங்கயம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த எட்டு வயது முதல் 17 வயது உடைய 20 கிராமப்புற அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கோவையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு வந்தடைந்துள்ளனர்.

இதையும் படிக்க : கடற்படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...போலீசார் விசாரணை!

மூன்று நாள் கல்வி சுற்றுலா வந்துள்ள அவர்கள், இன்று வண்டலூர், கோட்டூர்புரம் பிர்லா பிளானிட்டோரியம், அண்ணா நூற்றாண்டு நூலகம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்க்கவுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, திங்கட்கிழமை காலை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் எழும்பூர் மியூசியம் மற்றும் கன்னிமாரா நூலகத்தை பார்வையிட உள்ளனர். தொடர்ந்து பிற்பகல் ரயில் மூலம் மீண்டும் திருப்பூர் திரும்புகின்றனர்.