"தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்" அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

"தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்" அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள், அவர்களை பாதுகாக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு என்று பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ்  உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் வினா- விடை நேரத்துடன் தொடங்கியது. அதில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும், இணைந்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.  
இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நீண்ட நெடிய விளக்கம் அளித்தார். 

இதையும் படிக்க : டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

"3 நாட்களே வந்தால் போதும் ஹால் டிக்கெட் வழங்கப்படும்" என நான் சொல்லியதாக சில ஊடகங்கள் திரித்து சொல்லப்பட்டன. அதற்கான விளக்கத்தை கொடுக்கும் போது அமைச்சர் அந்தர் பல்டி என செய்தி வெளியிடுகிறார்கள், பத்திரிகை செய்திகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் தவிர தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்த கூடாது என்று கூறினார்.

கொரோனாவுக்குப் பின் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சவால்களை மேற்கொண்டுள்ளோம் என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் விளக்கம் அளித்தார். அத்துடன் "தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள், அவர்களை பாதுகாக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு" என்று, பெற்றோருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.