சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதியை பதவி நீக்கக்கோாிய வழக்கு இன்று மீண்டும் விசாரணை!!

அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஆகியோரை பதவிநீக்கம் செய்யக்கோாிய வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபுவும், திமுக எம்பி ராசாவும் பங்கேற்று பேசிஇருந்தனர்.

இந்நிலையில் சனாதனம் குறித்து சா்ச்சைக்குாிய கருத்துக்களை பேசியதாக அமைச்சா்கள் உதயநிதி, சேகா்பாபு, திமுக எம்பி ராசா ஆகியோரை பதவிநீக்கம் செய்யக்கோாி இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் குமார் என்பவர் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் உதயநிதி, எம்பி ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார். அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் ஜோதி, வழக்கு என்பது இரு நீதிபதிகள் அமர்வில் தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மூவாின் பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டாா். அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணை வரவுள்ளது.