ஜெயலலிதாவின் கார், அதிமுக கொடியுடன் வந்த சசிகலா...

ஜெயலலிதாவின் கார், அதிமுக கொடியுடன் வந்த சசிகலா...

ஜெயலலிதாவின் கார், அதிமுக கொடியுடன் வந்த சசிகலா...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு ஏற்கனவே வந்துள்ள நிலையில், சசிகலாவும் தற்போது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். 
 
ஜெயலிதாவின் காரில் கட்சிக்கொடியுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார் சசிகலா. ஏற்கனவே கட்சிக்கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று வழக்கு தொடுத்திருந்த நிலையில், கட்சிக்கொடியுடன் சசிகலா வந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.