600 நாட்களுக்குப் பின் பள்ளிகள் முழுமையாகத் திறப்பு... அரசுப்பள்ளியில் முதலமைச்சர் ஆய்வு...

சென்னையில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

600 நாட்களுக்குப் பின் பள்ளிகள் முழுமையாகத் திறப்பு... அரசுப்பள்ளியில் முதலமைச்சர் ஆய்வு...

தமிழகத்தில் 600 நாட்களுக்குப் பிறகு, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ மாணவியரை, ஆசிரியர்கள், இனிப்புகள் வழங்கியும், மலர் தூவியும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவ மாணவியர் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை கிண்டி மடுவின்கரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாணவ மாணவியரின் வருகை குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தினார். மேலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியில் இருந்து வெளியே வந்த பிறகு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும்கட்சித் தொண்டர்களை சந்தித்து அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.