கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறப்பு.. பிள்ளைகளுக்கு எழுதுபொருட்கள் வாங்க பெற்றோர்கள் ஆர்வம்!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி நாளை திறக்கப்பட உள்ளன நிலையில்,  தங்களது பிள்ளைகளுக்கு தேவையான எழுதுபொருட்கள் வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டியதால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறப்பு.. பிள்ளைகளுக்கு எழுதுபொருட்கள் வாங்க பெற்றோர்கள் ஆர்வம்!!

தமிழகதத்தில், அரசு  பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கான கோடை விடுமுறை கடந்த மே 14-ம் தேதி தொடங்கியது. இந்த விடுமுறை காலத்தில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்கள் வாயிலாக மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.

இந்நிலையில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன நிலையில், இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பள்ளிகள் திறப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தங்களது பிள்ளைகளுக்கு தேவையான எழுதுபொருட்கள் புத்தக பைகள்  வாங்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை திருச்சி  மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள  கடைவீதிகளில் நோட்டு புத்தகம் எழுதுகோள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் வாங்கி செல்வதை காண முடிகிறது. பிரபல் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

இதனிடையே  எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்த திட்டம் துவக்கப்படுகிறது. முன்னதாக பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களையும் மு.க.ஸ்டாலின்  வரவேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.