மத்திய அரசின் முடிவுக்கு சீமான் வரவேற்பு...!

மத்திய அரசின் முடிவுக்கு சீமான் வரவேற்பு...!

தஞ்சை மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும்  திட்டத்தை  ஒட்டுமொத்தமாகக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும்  திட்டத்தை  மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கிற திட்டமானது மத்திய அரசால் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ”தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மிகவும் நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு!

தமிழர்களின் எதிர்ப்புணர்வுக்கு அடிபணிந்து திட்டத்தைச் செயல்படுத்துவதிலிருந்து பின்வாங்கியிருக்கும் பாஜக அரசின் கொள்கைமுடிவு காவிரிப்படுகை வேளாண்பெருங்குடி மக்களால் கொண்டாடத்தக்கது என்றும், இது தமிழர் நிலத்தின் மீது தொடுக்கப்படும் நிலவியல் போருக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த  இனமானத் தமிழர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.