செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு; தலைமை நீதிபதி முடிவெடுப்பார்...!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு;   தலைமை நீதிபதி முடிவெடுப்பார்...!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து, தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு  உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் அமர்வு தெரிவித்துள்ளது.

கடந்த 28 - தேதி  அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுவரை இந்த வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகையை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 
அப்போதே அவருக்கு ஜாமின் கேட்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியிடம் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து நீதிமன்ற விசாரணைக்காக இந்த வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 

இதனை நிராகரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி இதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என்றும் ஜாமின் மனுவை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் தெரிவித்தார்.

நேற்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கவனத்திற்கு எடுத்துக்கொண்டார். இதனையடுத்து இன்று ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். 

பின்னர், மீண்டும் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ளனர்.  இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கும் அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி  நீதிமன்ற வட்டாரங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறிருக்க,  அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, நீதிபதி அல்லி உத்தவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றத்திடம் உத்தரவு பெற்று வரும்படி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்க   |    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கும் அதிகாரம், சிறப்பு நீதிமன்றத்திற்கா? அமர்வு நீதிமன்றத்திற்கா?