தமிழக பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் : அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழக பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் : அரசு அதிரடி உத்தரவு..!!

பள்ளி வளாகங்களில் ஆசிரியரால் மாணவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது சமீபகாலமாக அதிகரித்து கொண்டிருக்கிறது கோவை மாணவியின் தற்கொலைக்கு பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது.  

இதுபோன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களின் அத்துமீறல்களை அடக்குவதற்காக ஒரு தகுந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. முன்னதாகவே பாலியல் புகார் கொடுக்க இலவச எண் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்ப்போது அதை இன்னும் மேம்படுத்தும் வகையில் மாணவர் மனசு என்னும் புகார் பெட்டியை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 37,386 பள்ளிகளிலும் இந்த பெட்டியை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அமைப்பதற்கான அணைத்து முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பெட்டியில் விழும் புகார்களுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் கல்வி வளாகங்களில் நடைபெறும் பாலியல் தொல்லைகள் வெகுவாக குறைக்கப்படவும் மாணவர்களின் மன உளைச்சலை சிறதளவேனும் குறைக்கவும் இந்த புகார் பேட்டி பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.