விடுதி மாணவர்களை வைத்து கழிப்பிட தொட்டியை சுத்தம் செய்ய சொன்ன அவலம்..வீடியோ வைரல்...பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் விடுதி மாணவர்களை வைத்து கழிப்பிட தொட்டி சுத்தம் செய்ய சொன்ன அவலம் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

விடுதி மாணவர்களை வைத்து கழிப்பிட தொட்டியை சுத்தம் செய்ய சொன்ன அவலம்..வீடியோ வைரல்...பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி அருகே செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் சில மாதங்களுக்கு முன்பு விடுதி மாணவர்களை வைத்து கழிப்பிட தொட்டியை சுத்தம் செய்யும் பணியானது நடைபெற்று உள்ளது

இந்த பள்ளிக்கூடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் சூழ்நிலையில் விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் மொத்த கழிவு நீரானது கழிப்பிட தொட்டிக்கு வந்து சேருவது வழக்கம்.

இந்த கழிப்பிட தொட்டியை சுத்தம் செய்ய சொன்னதன் அடிப்படையில், விடுதி மாணவர்கள் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் மாணவர்கள் கழிப்பிட தொட்டியை சுத்தம் செய்வதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்கள் பரவி வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றதன்பேரில், மதுரை மாவட்ட குழந்தைகள் அதிகாரி 3 பேர் கொண்ட குழு தற்சமயம் அந்த பள்ளிக்கூடத்திற்கு நேரடியாகச் சென்று ஆசிரியர்கள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவமானது மதுரை மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது