அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை... விரைவில் தீர்வு!!

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை... விரைவில் தீர்வு!!

சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்ள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  அதேபோல் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தையும் அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் அறிவுரை படி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது எனவும் அரசு பள்ளிகளை மேம்படுத்த முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் எனவும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்களது மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் அரசு பள்ளிகளில் பல சலுகைகளை நாங்கள் கொடுக்கிறோம் எனவும் இன்று அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிகம் வருகிறார்கள் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர் கொரோனா காலத்திற்கு முன்பாக 12 லட்சம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், அதன் பிறகு 6 லட்சம் மாணவர்கள் ஆண்டிற்கு சேர்ந்து வந்தனர் எனவும் இது கடந்த 2 ஆண்டுகளாக 11 லட்சமாக உள்ளது எனவும் கூறிய அமைச்சர் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:   தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்!!