வனத்துறை அதிகாரிகளால் தாக்குதலுக்குள்ளான சமூக ஆர்வலருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

பழங்குடியின் மக்களுக்கு உதவச்சென்றபோது வனத்துறை அதிகாரிகளால் தாக்குதலுக்குள்ளான சமூக ஆர்வலருக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகளால் தாக்குதலுக்குள்ளான  சமூக ஆர்வலருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

மதுரையைச் சேர்ந்த அரிசி வியாபாரியான டைசன் என்பவர் பழங்குடியின மக்களுக்கான சமூக ஆர்வலராகவும் செயல்பாட்டாளராகவும் உள்ளார்.

மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு:

இந்நிலையில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் குறித்து பழங்குடியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி தச்சமலைக்கு கடந்த 2019ம் ஆண்டு அவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அத்துமீறி நுழைந்ததாக அவரை தாக்கிய வனத்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் பெற்று ரசீது தராததாகவும் தெரிகிறது.  இதை எதிர்த்து டைசன் மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனித உரிமைகள் ஆணையம்:

இந்நிலையில் குற்றச்சாட்டுகள் நிரூபனமாவதாகக் கூறிய ஆணையம், 8 வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து 4 லட்ச ரூபாய் பெற்று டைசனிடம் ஒப்படைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.