சுற்றுசூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம்... செங்கல் சூளை வைத்திருப்பவர், மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி...

செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட தொழில் செய்பவர்கள், இனி சுற்றுசூழல் அனுமதியின்றி மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுசூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம்... செங்கல் சூளை வைத்திருப்பவர், மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி...

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.

ஒன்றரை மீட்டர் ஆழம் வரை மண் எடுக்கலாம் என்றும், மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மண் எடுக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.

அதே சமயம் கிராமப்புற சாலைகளில் இருந்து 10 மீட்டர் வரையிலும், தேசிய நெடுஞ்சாலை, ரெயில்வே சாலை, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டர் வரையிலும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்து, மண் எடுப்பதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.