தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - முதலமைச்சர்!

தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - முதலமைச்சர்!

திமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் நோக்கில் சிலர் மத கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய அலுவலக கட்டடத்தை பார்வையிட்ட அவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களிடம் கலந்துரையாடினார். 

இதையும் படிக்க : அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ 21.58 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை...!

அதனை தொடர்ந்து ஒழுகினசேரி பகுதியில், மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து திமுக கொடியை ஏற்றி வைத்தவர், அங்கிருந்த கருணாநிதி மற்றும் அன்பழகன் ஆகியோரது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதன் பின் நிர்வாகிகளிடம் பேசிய அவர், நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் மதசார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றார். தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் நோக்கில் சிலர் மத கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக சாடினார்.