திமுக ஆட்சியில் நீர்நிலைகளின் நிலை ......? -உதயநிதி ஸ்டாலின்

திமுக  ஆட்சியில் நீர்நிலைகளின் நிலை ......?   -உதயநிதி ஸ்டாலின்

சென்னை கோடம்பாக்கத்தில் 1.6 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கோதண்டராமன் கோவில் குளம் திறப்பு விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா,மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொதுசுகாதார அவசரநிலை பிரகடனம்  விலக்கி கொள்ளப்படுவதாக உலக பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று தெரிவித்துள்ளதாகவும், இதனால் இனி பயப்பட வேண்டியதில்லை என்றாலும் கூட்டம் கூடும் போது முக கவசம் அணிவதும் , தனிமனித பாதுகாப்பை கடைப்பிடிப்பதும் அவசியம் என்றார்.

மேலும், சிதம்பரத்தில் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டது என்ற ஆளுநரின்  பேச்சு அதிர்ச்சிகரமாக இருக்கிறது  என்றும், "மருத்துவ அறிக்கையில் இரு விரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்று இருக்கிறது; அதை கூட ஆளுநர் பார்க்கவில்லை;ஆளுநர் அரசின் செயல்பாட்டை பூத கண்ணாடி வைத்து பார்க்கிறார்" என்றார்.

அதனைத்தொடர்ந்து  அமைச்சர் உதயநிதி பேசும் போது;-  "அனைத்து நாடுகளிலும் அமைச்சர் மா.சுப்ரமணியன்  ஓடி விட்டாலும் அவரது சொந்த தொகுதியான சைதாப்பேட்டையில் ஓடி கொண்டே தான் இருக்க வேண்டும்", என்றார்.

இதையும் படிக்க      }  பட்டா நிலத்தை இப்படி பயன்படுத்த முடியாது..! - சென்னை உயர்நீதி மன்றம்.

TN govt to restore waterbodies, parks in urban areas | Chennai News, The  Indian Express

மேலும், திமுகவில் இளைஞர் அணி செயலாளராகதான் பதவியேற்ற பின் இளைஞர் அணியின் முதல் பணியாக தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டதாகவும், திமுக இளைஞரணி சார்பில் 1000 குளங்களை சீர்செய்தகாகவும், . பொதுமக்கள் நீர் நிலைகளை பாதுக்காப்பதை இயக்கமாக முன்னெடுத்து அரசிற்கு தோளோடு தோள் கொடுக்க வேண்டும்  என்றும் கூறினார்.

இதையும் படிக்க      } தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்குத்... தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்...!