"மாணவர்களின் வாசிப்பு திறன் தொடர் ஓட்டம்" திட்டம்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

திருவெறும்பூர் பகவதிபுரம் நடுநிலைப் பள்ளியில் "மாணவர்களின் வாசிப்பு திறன்  தொடர் ஓட்டம்" திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

"மாணவர்களின் வாசிப்பு திறன் தொடர் ஓட்டம்" திட்டம்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை கூகுல் நிறுவனத்தின் வழியே " ரீடிங்மாரத்தான் " - என்கிற புதிய திட்டத்தை இன்று  தொடங்கியுள்ளது. பகவதிபுரம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு வாசிப்புத்திறன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  அன்பில் மகேஷ்,குழந்தைகளுக்கு வாசிக்கின்ற திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

1  முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் வாசிப்புத் திறனுக்காக கதைகளோடு புகைப்படங்களும் இருப்பதால், படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் " கூகுல் ரீடிங் அலாங்" என்ற செயலியை பதிவிறக்கம்  செய்து அதன் வழியே எளிய முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.