பள்ளிக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் தர்ணா....!

பள்ளிக்கு  பேருந்து வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் தர்ணா....!

திண்டுக்கல் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பேருந்து வசதி செய்து தர வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் பரபரப்பு.

திண்டுக்கல் அடுத்துள்ள குரும்ப பட்டி ஊராட்சி  உட்பட்ட மீனாட்சி நாயக்கன்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி, குரும்பபட்டி சோலைராஜா காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த  மாணவர்கள் 1ம் வகுப்பு முதல்5ம் வகுப்பு வரை கல்வி கற்று வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று  கடந்த 2018 -19 ஆம் ஆண்டு  புதிதாக 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப்பள்ளி திண்டுக்கல் எம்.வி.எம் அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள வசந்த் நகரில் கட்டப்பட்டது.

 தற்பொழுது இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு மாணவர்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து வரவேண்டும். முறையான சாலை வசதி கிடையாது மேலும் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

மேலும் மது அருந்திய குடிமகன்களின் தொந்தரவு உள்ளது. நடந்து வரும் பொழுது மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி கிடையாது. இல்லையென்றால் அந்தப் பகுதியில் வரக்கூடிய மினி பேருந்தில் பயணம் செய்து வர வேண்டும். இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளிகள் தான் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 

ஆகையால் நாள்தோறும் பேருந்துக்கு கட்டணம் செலுத்தி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளது ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளி நாட்களில் மட்டும்  காலை மாலை மாணவர்கள் சென்று வர அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீருடையுடன் இன்று 13.06.23 திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வழங்கினர்

இதையும் படிக்க     |  ஈவேரா அரசு கல்லூரி அங்கீகாரம் ரத்து - தமிழக அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் அறிவிப்பு