முதலமைச்சரின் தொகுதியில் உதயநிதி ஆய்வு...!

முதலமைச்சரின் தொகுதியில் உதயநிதி ஆய்வு...!

கொளத்தூர், சேப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கொளத்தூர், சேப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை இன்று காலை மேற்கொண்டார். அதன்படி, முதலில் முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படிக்க : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடல்” உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் சி. வி.கணேசன்!

இதனைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் 2 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார். தொடர்ந்து, ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் எத்தனை மினிஸ்டேடியம் அமைத்து தர முடியும் என்பதை பரிசீலித்து வருவதாகவும், பின்னர் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 

முன்னதாக, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் ஹீரோ கோப்பைக்கான ஹாக்கி போட்டியானது நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளையும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.