புதுக்கோட்டையில் வெடி தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து...!

புதுக்கோட்டையில்   வெடி தயாரிப்பு ஆலையில்  திடீர் தீ விபத்து...!

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளலூர் காவல் நிலையம் அருகே உள்ள பூங்கொடி கிராமத்தில் வெடி தயாரிப்பு ஆலையில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளலூர் காவல் நிலையம் அருகே உள்ள பூங்கொடி கிராமத்தில் வைரமணி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் பல்வேறு கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள் மற்றும் அனைத்து விதமான விழாக்களுக்கும் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இருந்தாலும் ஆறு பேர் இன்று வெடி தயாரித்துள்ளனர். அப்பொழுது, எதிர்பாராதவிதமாக  தீ விபத்து ஏற்பட்டது. இதில்  6  பேரும் காயமடைந்துள்ளனர். 

பலத்த காயமடைந்த 6- பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர், தற்பொழுது அந்த இடத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தால்  தீ பற்றியதா  அல்லது வேறு ஏதும் வகையில் தீ பற்றியதா  என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வெடி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து  சம்பவத்தால்  அந்த பகுதி  பரபரப்பாக காணப்படுகிறது. 

இந்நிலையில் சற்று முன் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இந்த ஆலையின் அருகே உள்ள தைலம் மரங்கள் தீ பற்றி எரிவதாகவும்,  அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்  கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க   | கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் வெடித்ததற்கு காரணம் சொல்லிய அமைச்சர்!