கலக்கலாக நடந்த ரேக்ளா ரேஸ்!!!

கோவை மாவட்டம் செஞ்சேரிமலையில் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 700க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.

கலக்கலாக நடந்த ரேக்ளா ரேஸ்!!!

கோவை மாவட்டம்: சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் செஞ்சேரி மலையில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

750க்கும் மேற்பட்ட நாட்டு இன காளைகள் பங்கேற்ற இந்த ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது. கோவை மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்து   வந்த காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்ததை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது வரும் காளை ஜோடிகளுக்கு முக்கால் பவுன் தங்கமும், இரண்டாவது வரும் காளைகளுக்கு அரைப்பவுன் தங்கமும் மூன்றாவது வரும் காளைகளுக்கு கால் பவுன் தங்கம் பரிசாக வழங்கப்பட்டதோடு, முதல் ஏழு காளைகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 15 ஜோடி காளைகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டதோடு அனைத்து காளைகளுக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. செஞ்சேரிமலை பகுதியில் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தை, சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்தனர். 

தமிழக முதல்வர் திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், நாட்டு இன மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரேக்ளா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் என, சுல்தான்பட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துமாணிக்கம் தெரிவித்தார்.