செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன்!

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன்!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதய இரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதாகவும் அதனை சரிசெய்ய அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய அவரை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என அவரது மனைவி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதற்கிடையே, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க:அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யக்கோரி...அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!